சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் ஃபூஜியன் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தின் போது அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வின் எழுச்சியை ஆழமாக நடைமுறைபடுத்தி, புதிய வளர்ச்சிக் கண்ணோட்டங்களை பன்முகங்களிலும் கடைப்பிடித்து நிதானமான நிலைமையில் முன்னேற்றங்களைத் தேட வேண்டும் என்றார்.
மேலும், சீர்திருத்தங்களை ஆழமாக்கி, உயர் தரமான வளர்ச்சியை முழுமையாக விரைவுபடுத்தி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கக் கட்டுமானத்தை முயற்சியுடன் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 16ஆம் நாள் முற்பகல், இம்மாநிலத்தின் தாராள வர்த்தக மண்டலத்தின் சியாமன் பிரிவில் ஷிச்சின்பிங் கள ஆய்வு செய்தார். அதனையடுத்து, கடந்த 40 ஆண்டு கால வளர்ச்சியின் மூலம், சியாமன் சிறப்பு மண்டலத்தில் தலைகீழான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், ஃபூஜியன் மாநிலம் மற்றும் சியாமன் நகர நிலைமையின் வளர்ச்சிக்கு ஏற்ப, அமைப்புமுறை மற்றும் கொள்கைத் தன்மை வாய்ந்த சாதனைகளைப் படைத்து, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்புப் பணிக்கு புதிய சாதனைகளைக் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.