AI தெரியாதவர்களுக்கு நோ ப்ரோமோஷன்! Accenture நிறுவனத்தின் அதிரடி ரூல்ஸ்  

Estimated read time 1 min read

முன்னணி தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை நிறுவனமான Accenture-இல், ஊழியர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால், ப்ரோமோஷன் பெற வேண்டுமென்றால் AI கருவிகளை கற்பதும், பயன்படுத்துவதும் இனி விருப்பத்தேர்வு அல்ல, அது கட்டாயம் என்று அந்த நிறுவனத்தின் CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய ஜூலி ஸ்வீட், கடந்த மூன்று ஆண்டுகளாக அக்ஸென்சர் நிறுவனம் தனது பணிச்சூழலில் AI தொழில்நுட்பத்தை படிப்படியாக ஒருங்கிணைத்து வருவதாக குறிப்பிட்டார்.
“கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது அதைப் பயன்படுத்துவது எப்படி கட்டாயமானதோ, அதேபோல்தான் இப்போது AI-யும். இது ஊழியர்களைக் கட்டாயப்படுத்துவது அல்ல, காலத்திற்கு ஏற்ற மாற்றம்,” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

You May Also Like

More From Author