ஆஸ்திரேலிய தலைமை ஆளுநராகப் பதவியேற்றுள்ள சமந்தா மோஸ்டின் அம்மையாருக்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை முதல் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் ஆஸ்திரேலியாவும் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகும். அவை ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் முக்கிய உறுப்பு நாடுகள் மற்றும் உலக பல துருவமுனை வளர்ச்சிப் போக்கின் முக்கிய சக்திகளாகும்.
சீரான மற்றும் நிதானமான வளர்ச்சி வாய்ந்த சீன-ஆஸ்திரேலிய உறவு, இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குப் பொருந்தியது என்றார். மேலும், இரு நாட்டு உறவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து உருவதைக் குறிப்பிட்ட அவர், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து பாடுபட்டு, நிலையான மற்றும் பலனளிக்கும் சீன-ஆஸ்திரேலிய பன்முக நெடுநோக்குக் கூட்டாட்சி உறவை உருவாக்குவதை முன்னேற்ற விரும்புகின்றேன் என்றும் குறிப்பிட்டார்.