மே 31ஆம் நாள், சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த எல்லை மற்றும் கடல் விவகாரத் துறை தலைவர் ஹோலியாங், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்காசியப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சர் அலுவலகத்தின் இணைச் செயலாளர் ஷில்பாக் ஆம்பூலெ ஆகிய இருவரும், புதுதில்லியில், இரு தரப்புகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி முறைமையின் 27ஆவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதில் இரு தரப்பினரும் எட்டிய ஒத்த கருத்துக்களின்படி, சீன-இந்திய எல்லைப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி தொடர்பான பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்க இரு தரப்பும் இசைந்துள்ளன. மேலும், தூதாண்மை மற்றும் இராணுவப் பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, எல்லை பிரதேசத்தின் அமைதியையும் நிதானத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்று இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இதனிடையில் இராணுவக் கமாண்டர்கள் நிலையிலான 19ஆவது பேச்சுவார்த்தை மற்றும் சீன-இந்திய எல்லை பிரச்சினைக்கான கலந்தாய்வு மற்றும் ஒருங்கிணைப்புப் பணி முறைமையின் 28ஆவது கூட்டத்தை வெகுவிரைவில் நடத்தவும் இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.