ஜூலை 9ஆம் நாள், சீனக் கம்யூனிஸட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவினரும், வெளியுறவு அமைச்சரும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினை பற்றிய சீனத்தரப்பின் சிறப்பு பிரதிநிதியுமான வாங்யீ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினை பற்றிய இந்தியத் தரப்பின் சிறப்பு பிரதிநிதியாக பொறுப்பேற்றுள்ள டோவலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சீனாவும் இந்தியாவும் உலகளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட வளரும் நாடுகளாகவும் புதிதாக வளரும் நாடுகளாகவும் இருக்கின்றன.
இருநாட்டுறவு உலகளவில் மென்மேலும் முக்கியமான தகுநிலை கொண்டுள்ளது. டோவலுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களை நிறைவேற்றி, எல்லைப் பிரதேசத்தில் தொடர்புடைய பிரச்சினைகளை சீராகக் கையாண்டு, எல்லைப்பகுதியின் அமைதியையும் பாதுகாப்பையும் கூட்டாக பேணிகாக்க விரும்புகின்றேன் என்று வாங்யீ தெரிவித்தார்.