இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1 அரசு விடுமுறை என்பதால் பணம் நேற்று வழங்கப்படவில்லை.

இன்று காலை முதல் நிவாரணம் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பல இடங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதால், அதிக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது

You May Also Like

More From Author