இந்தியா – சீனா எல்லையில் 6 ஆண்டுகளுக்கு பின் புதிய திருப்பம்  

Estimated read time 1 min read

இந்தியா – சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் வழியிலான எல்லை வர்த்தகம் ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்குகிறது.
2020-இல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த வர்த்தக பாதையை மீண்டும் திறக்க இரு நாட்டு அரசுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,310 மீட்டர் (14,140 அடிகள்) உயரத்தில் கிழக்கிமய மலையில் அமைந்துள்ள நாதுலா கணவாய், பண்டைய பட்டுப் பாதையின் முக்கிய பகுதியாகத் திகழ்ந்தது.

You May Also Like

More From Author