காமராஜர் ஆட்சியைப் போல முதலமைச்சர் விஜயின் ஆட்சி உள்ளதாக மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், “காமராஜர் ஆட்சியை போல முதலமைச்சர் விஜயின் ஆட்சி உள்ளது. 9 ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியில் லஞ்சம் என்பதே இல்லை. காமராஜரின் 9 ஆண்டுகால ஆட்சியில் நடந்ததை போல விஜயின் 2 மாத ஆட்சியில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. தவெகவின் இரண்டு மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாராட்டுகள். இதேபோல் பல்வேறு துறைகளும் லஞ்சம் இன்றி சிறப்பாக செயல்படுகிறது. அரசு நியமனங்கள், தனியார் பள்ளி அனுமதி போன்றவற்றில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது;. தமிழ்நாட்டில் மீண்டும் லஞ்சம் தவிர்த்த காமராஜர் ஆட்சி ஐந்தாண்டுகள் நடைபெற வேண்டும்” என்றார்.
