மதுரை, கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை, கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கோரிய தமிழ்நாடு அரசின் கோரிக்கை கடந்த நவம்பரில் நிராகரித்தது. இதனையடுத்து கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான போதுமான மக்கள்தொகை இல்லை என கடந்தமுறை காரணம் கூறிய மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சகம் , மெட்ரோவுக்கு மக்கள் தொகை மட்டுமே காரணமாக இருக்க முடியாது என இம்முறை விளக்கம் அளித்துள்ளது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை, இரு நகரங்களிலும் மெட்ரோவால் போக்குவரத்து நேரம் குறையும் என நம்பவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பதில் பேருந்து போக்குவரத்து நடைமுறையை மேம்படுத்தலாம் என்றும் மத்திய அரசு யோசனை கூறியுள்ளது.
