தமிழகத்தை தாக்குமா சுனாமி….? ஆபத்து இருக்கிறதா…? நிபுணர்கள் விளக்கம்….!!!

2004ஆம் வருடம் உருவான கொடூரமான சுனாமியால் இந்தியா உள்பட 14 நாடுகளில் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இன்னும் மக்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி சென்றது இந்த ஆழிப்பேரலை. இந்த சுனாமியால் குறிப்பாக தமிழகத்தில் 2,758 பேர் பலியாகினர்.

இந்த நிலையில், ஜப்பானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் எதிரொலிக்கும் என்ற பீதி உருவானது. ஆனால், ஜப்பானின் மத்திய கடற்கரை பகுதியை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்

You May Also Like

More From Author