பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.
அதன் பிறகு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இவருக்கு கிடைத்த நிலையில் 1996 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் உலக நடப்புகள் குறித்து கனித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு குறித்து இவர் கூறிய கணிப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இவரின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும். 2024 ஆம் ஆண்டில் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.