தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையாகவும் கனமழை காரணமாக தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில பாடங்களுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவில்லை.

இந்த நிலையில் நாளை மறுநாள் ஜனவரி நான்காம் தேதி திட்டமிட்டபடி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விடுபட்ட அரையாண்டு தேர்வு நடத்தப்படும் எனவும் இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிகள் செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்த இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

You May Also Like

More From Author