ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்கு சீனா களத்தில் உதவியது அம்பலம்  

Estimated read time 1 min read

இந்தியாவின் எல்லை தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் மோதலின் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா தற்போது அனுசரித்து வருகிறது.
இந்தச் சூழலில், சீன அரசுத் தொலைக்காட்சியான சிசிடிவிக்கு அளித்த பேட்டியில், சீனாவின் ஏவிஐசி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் ஜாங் ஹெங் அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மே 2025ல் நடைபெற்ற அந்த நான்கு நாள் போரின் போது, பாகிஸ்தான் விமானப் படைத் தளங்களில் தங்கியிருந்து தாங்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீனாவிற்கு வெளியே ஜே-10சி ரக போர் விமானங்களைப் பயன்படுத்தும் ஒரே நாடு பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author