துபாயில் வசிக்கும் மக்களுக்கு ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை – தற்போதைய கள நிலவரம்  

Estimated read time 1 min read

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரமான துபாயில் வசிக்கும் மக்களின் செல்போன்களுக்கு இன்று அவசர கால ஏவுகணைத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் அங்கிருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன.
இதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், துபாய் மற்றும் அபுதாபி பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் நிகழக்கூடும் என்பதால், “வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், அவசர நிலைக்குத் தயாராக இருக்கவும்” என குடியிருப்பாளர்களுக்கு நான்கு முறை தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.bed

You May Also Like

More From Author