தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 9க்கு ஒத்திவைக்கப்பட்டதா? அரசு விளக்கம்  

Estimated read time 0 min read

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உண்மை சரிபார்ப்பு பிரிவு, மாநிலம் முழுவதும் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று மீண்டும் திறக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு ஜூன் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்ற பரவலான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், வதந்திகளை நிராகரித்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 2 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இருப்பினும், கடுமையான கோடை வெப்பம் காரணமாக, பள்ளிகளை திறப்பது தாமதமாகலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

Please follow and like us:

You May Also Like

More From Author