சீன-அமெரிக்க ஜெனிவா பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தையின் பொது கருத்துகளை சீனா மீறியது என்ற தகவலை அண்மையில் அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
மே 12ஆம் நாள் சீன-அமெரிக்க ஜெனிவா பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தை பற்றிய கூட்டறிக்கையை இரு நாடுகள் வெளியிட்ட பிறகு, சீனா பொது கருத்துகளைப் பின்பற்றி, அமெரிக்கா கூடுதல் சுங்க வரி வசூலிப்பு குறித்து மேற்கொண்ட தொடர்புடைய பதில் நடவடிக்கைகளை சீனா நிறுத்தியுள்ளது. ஆனால், இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா சீனாவின் மீது தடை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டது. இந்த நடவடிக்கைகள் இரு நாட்டு அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள பொது கருத்துகளை மீறியுள்ளன. இவை, ஜெனிவா பொருளாதார வர்த்தக பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட பொது கருத்துகளை சீர்குலைத்து, சீனாவின் நலனுக்குத் தீங்கு விளைவித்தன. மேலும் நியாயமற்ற குற்றச்சாட்டை சீனா உறுதியாக மறுக்கின்றது என்றார்.