வெங்காயம்.

வெங்காயம்!

கவிஞர் இரா. இரவி.

******

உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது தான்
உரித்துப் போடாவிட்டால் ஒன்றும் ருசி இருக்காது

விலைவாசி உயர்ந்து விட்டால் ஏழைகள் எல்லாம்
வாடி விடுவார்கள் பேசும் பொருளாகி விடும்

பகுத்தறிவுப் பகலவன் அடிக்கடி சொல்வார்
பெரியாரால் பிரபலமான சொல் வெங்காயம்

மருத்துவ குணம் மிக்கது இந்த வெங்காயம்
மருத்துவரிடம் கொடுக்காமல் வணிகரிடமிருந்து வாங்குதல் நன்று

சத்துக்கள் எல்லாம் நிறைந்திட்ட வெங்காயம்
சகலரும் விரும்பிடும் பொருள் வெங்காயம்

வாழ்வின் தத்துவம் சுழியம் உணர்த்திடும்
வாழ்வதற்கு தேவையான உணவுப் பொருள் வெங்காயம்

பெரியதை விட சிறியதற்கு மதிப்பு அதிகம்
பெரிதை விட சிறியதே விலை அதிகம்

சாம்பாருக்கு நல்ல சுவை தருவது வெங்காயம்
சமையலறையில் பெரும்பங்கு வகிக்கும் வெங்காயம்

சைவம் அசைவம் இரண்டுக்கும் தேவை வெங்காயம்
சின்ன வெங்காயம் இதயத்தை சீராக்கும் வெங்காயம்!

You May Also Like

More From Author