சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீருடன் ஜுலை 22ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வாங்யீ கூறுகையில், சீன மற்றும் மாலத்தீவு உறவு, புதிய வரலாற்று துவக்கப் புள்ளியில் உள்ளது. மாலத்தீவுடன் இணைந்து, பாரம்பரிய நட்பை வெளிக்கொணர்வது, அரசியல் நம்பிக்கையை ஆழமாக்குவது, பல்வேறு நிலைகள் நட்புப் பரிமாற்றத்தை அதிகரிப்பது, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட இரு நாட்டு தலைவர்களும் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துக்களை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
ஜமீர் கூறுகையில், மாலத்தீவு ஒரே சீனா என்ற கோட்பாட்டைப் பின்பற்றி வருகின்றது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்கவும், பொருளாதாரம், வர்த்தகம், நாணயம், சுற்றுலா, மக்களிடையேயான தொடர்பு முதலிய துறைகளில் பரஸ்பரம் பயன் தரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்.