ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

Estimated read time 1 min read

பிரான்ஸிடம் 114 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 2-ஆவது வாரத்தில் அந்நாடு பதிலளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

விமானப் படையை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்துவரும் நிலையில், 114 போர் விமானங்களைத் தயாரித்து கொடுக்குமாறு கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

ஏற்கெனவே 62 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய பிரான்ஸிடம் மத்திய அரசு ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், தற்போது மேலும் 114 விமானங்களைக் கேட்டிருப்பதால், மொத்த ஆர்டர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு ஆகஸ்ட் 2-ஆவது வாரம் பிரான்ஸ் பதிலளிக்கும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You May Also Like

More From Author