2026ஆம் ஆண்டு ஏபெக் டிஜிட்டல் வாரம் என்னும் நிகழ்வு சீனாவின் ச்செங்தூ நகரில் நடைபெற்று வருகிறது. செல்லிடப்பேசி மற்றும் தகவல்தொடர்புகளுக்கான உலகளாவிய அமைப்பு சங்கத்தின் பெரிய சீனா பிரதேசத்தின் தலைமை இயக்குநர் ஸிஹான் அம்மையார் கூறுகையில், செல்லிடப்பேசி மற்றும் தொலைத்தொடர்புத் தொழில் துறையில் ச்செங்தூ நகரம் வலுவான ஈர்ப்பு ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
மேற்கு சீன நகரங்களின் பிரதிநிதியான ச்செங்தூவில், எண்ணியல் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக உயர்வேக வளர்ச்சியடைந்து வருகிறது. எண்ணியல் பொருளாதாரத்தின் மையத் தொழில் துறையின் அதிகரிப்பு மதிப்பு, மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பில் 15 விழுக்காட்டுக்கு மேல் வகித்துள்ளது.
மேலும், சீனாவின் தேசிய ஒருங்கிணைந்த கணிப்பு சக்தி வலையமைப்பின் ச்செங்தூ-ச்சொங்ச்சிங் மையத்தின் முக்கிய நகரமாக, ச்செங்தூவின் கம்ப்யூட்டிங் சக்தி அளவு 29 ஆயிரம் பிஃப்ளாப்ஸ்(PFLOPS 1P=வினாடிக்கு 1000 டிரில்லியன் முறை கணித்தல்) எட்டி, சீனாவின் “கிழக்கு தரவு மேற்கு கணினி திட்டத்துக்கு”சேவை அளித்து வருகிறது.
