நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகளுக்கு…. பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு…!!! 

Estimated read time 1 min read

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. கடந்த காலங்களில் அனைத்து பட்ஜெட்டையும் பாஜக தனி பெரும்பான்மை பலத்துடன் தாக்கல் செய்த நிலையில் முதல் முறையாக பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

உற்பத்தி அதிகரிப்பு, ஊரக மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட ஒன்பது விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இயற்கை வேளாண்மை செய்ய ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும். கடுகு, நிலக்கடலை மற்றும் சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author