நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்துடன் நடைபெற்று வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா செய்தாராமன் ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் பட்ஜெட்டில் பல துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்ட அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ரயில்வே துறைக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரயில்வே துறைக்கு எந்தவிதமான நிதியும் ஒதுக்கி அறிவிப்பு வெளியாகவில்லை. வழக்கமாக பொது பட்ஜெட்டுடன் ரயில்வே துறைகளுக்கான அறிவிப்புகளும் வெளியாகும்.
ஆனால் இந்த முறை எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. மேலும் இதனால் ரயில்வே குறித்து அறிவிப்புகளுக்காக காத்திருந்தோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.