சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங்கின் தலைமையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிதி மற்றும் பொருளாதார ஆணையத்தின் 2ஆவது கூட்டம் ஜுலை 20ஆம் நாள் பிற்பகல் நடைபெற்றது.
விளை நிலங்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்துவது, உவர் நிலங்களை சீரமைத்து பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்துகையில், உணவு பாதுகாப்பு, தேசத்தின் முதன்மை பணியாகும். உணவு உற்பத்திக்கு விளை நிலம் உயிர் நாடியாகும். தொழில் நுட்பங்களின் மூலம் விளை நிலங்களின் பாதுகாப்பைப் பயனுள்ள முறையில் வலுப்படுத்தி, இந்த நிலங்களின் தரத்தை உயர்த்தி, வேளாண் உற்பத்தி வாய்ப்புகளை நிதானமாக விரிவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.