சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜூலை 23ஆம் நாள் 6வது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவாகும். இரு நாடுகளின் கூட்டு முயற்சியுடன், புதிய காலத்தில் இரு நாட்டுப் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவு முன்னேறி வருகின்றது. இரு நாட்டு எரியாற்றல் ஒத்துழைப்பு நாளுக்குநாள் நிதானமாக வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய வரலாற்று துவக்கப் புள்ளியில், ரஷியாவுடன் இணைந்து, எரியாற்றல் துறையில் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னேற்றி, உலக எரியாற்றல் துறையில் வலிமையான பசுமையான மற்றும் சீரான வளர்ச்சியை முன்னெடுப்பதற்குப் பங்காற்ற சீனா விரும்புகின்றது என்றார்.
அதே நாள், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும் 6வது சீன-ரஷிய எரியாற்றல் வணிக மன்றத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.