தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாத சீனா

தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு என கூறப்படும் தீர்ப்பு வெளியிடப்பட்ட 10ஆம் ஆண்டு நிறைவு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் ஜூலை 10ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், இந்த தீர்ப்பு சட்ட விரோதமாகவும், பயனற்றதாகவும் இருந்து கட்டுப்பாட்டுரிமை இல்லை என சீனா பலமுறை விளக்கிக் கூறியுள்ளது. இதனை சீனா ஏற்றுக் கொள்ளவும் அங்கீகரிக்கவும் இருக்காமல், இத்தீர்ப்பை அடிப்படையாகக் கொண்ட எந்த கோரிக்கையையும் செயல்களையும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

மேலும், தென் சீனக் கடலில் நடத்தை விதிமுறையை வகுப்பது, தென் சீனக் கடலில் பல்வேறு தரப்புகளின் நடத்தை பற்றிய அறிக்கையை செயல்படுத்தும் முக்கிய நடவடிக்கையும், சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் முக்கிய ஒத்த கருத்தும் ஆகும். மேற்கூறிய தீர்ப்புக்கும் இந்த விதிமுறைக்கும் தொடர்பில்லை. பிலிப்பைன்ஸ் தரப்பு இந்த தீர்ப்பைப் பயன்படுத்தி நடத்தை விதிமுறையின் உருவாக்கத்துக்குத் தடங்கல் ஏற்படுத்த கூடாது என்றும் மாவ் நிங் கூறினார்.

You May Also Like

More From Author