சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு

Estimated read time 1 min read

சிஎம்ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சியின் இலச்சினை வெளியீடு

சீன ஊடகக் குழுமத்தின் 2026ம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான தலைப்பும் இலச்சினையும், டிசம்பர் 10ம் நாள் வெளியிடப்பட்டது. “பாயும் குதிரை, தடுக்கப்பட முடியாத சக்தி” என்ற தலைப்புடன், உலகளாவிய சீனர்கள் வசந்த விழாவின் முந்திய நாளில் ஒன்றுகூடி மகிழ்ச்சியான மற்றும் மங்கலமான சூழலில், புத்தாக்கத் தன்மை வாய்ந்த இக்கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசிக்கவுள்ளனர்.

இந்த்த் தலைப்பின் உச்சரிப்பிலுள்ள “ச்சி ஜி”என்பது பழங்கால மூதாதையர்கள், குதிரையை குறிக்கின்றனர். இதன் மூலம், சீனத் தேசம் இடைவிடாமல் முன்னேற்றங்களை நாடும் பண்பு, வெளிக்காட்டப்படுகிறது. அதே உச்சரிப்புக்கு சீன மொழியில் “அதிசயம்”என்று பொருள். அதிசயத்தை உருவாக்கும் மனவுறுதி மற்றும் நம்பிக்கையுடன், புதிய யுகத்தில் புதிய சாதனைகளின் மீதான அருமையான எதிர்பார்ப்பு, இத்தலைப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author