மேகதாதுவில் அணை கட்ட அனுமதி இல்லை… மத்திய அரசு…!! 

Estimated read time 0 min read

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வரும் நிலையில் இதற்காக அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

இந்த நிலையில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மேகத்தாது தொடர்பான கர்நாடக அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான காவிரி நீரை பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதிலிருந்து அணை கட்டிய தீருவோம் என பிடிவாதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author