நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.
தற்போதைய தகவல் படி உயிரழந்தவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்கு விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தில் 19 பேர் இருந்ததாகவும், விமானத்தில் விமானத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டுமே இருந்தனர் என்றும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து வெடித்த தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்திற்கு உள்ளன விமானத்தின் விமானி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.