சீனாவில் 64 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்கின்றனர்

சீனாவில் 90 கோடிக்கும் அதிகமான மக்கள் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் மேற்கொண்டு வருகின்றனர். இது சீனாவின் 140 கோடி மக்கள்தொகையில் 64.3 விழுக்காடு வகிக்கிறது என்று அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் உள்நாட்டு தேவையை விரிவுபடுத்துவதற்கும் உயர்தர பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் டிஜிட்டல் நுகர்வு ஒரு முக்கியமான உந்துசக்தியாக மாறியுள்ளது.

சீன இணைய வலையமைப்பு தகவல் மையம் வெளியிட்ட இந்த அறிக்கையின் படி, கடந்த ஆறு மாதங்களில், ஆன்லைன் ஷாப்பிங் பயனர்களில் 25 விழுக்காடு பேர் ஆற்றல் சேமிப்புத் தயாரிப்புகளை வாங்கியுள்ளனர்.

மேலும், 26.1 விழுக்காடு பேர் ஆரோக்கிய மற்றும் உடல்நல தயாரிப்புகளை வாங்கியுள்ளனர் மற்றும் 25 விழுக்காடு பேர் ஸ்மார்ட் வீட்டு உபயோக தயாரிப்புகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author