PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டுவதற்கான உதவியை மத்திய அரசு செய்யும் என்று மத்திய அமைச்சரவை இன்று அறிவித்தது.
நேற்று பதவியேற்ற புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.
இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
இதற்கு முன்னதாக, 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடவும் பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற முதல் நாளில், வீட்டு வசதி மற்றும் விவசாயிகள் தொடர்பான இரண்டு முடிவுகள் முடிவுகள் எடுக்கப்பட்டன.
9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிட பிரதமர் மோடி இன்று காலை ஒப்புதல் அளித்தார்.

You May Also Like

More From Author