மம்தா பானர்ஜியின் அடைக்கல வாக்குறுதி பயங்கரவாதிகளுக்கு உதவக்கூடும்: பங்களாதேஷ்  

அண்டை நாடான பங்களாதேஷில் நடைபெற்று வரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை நாடி வந்தால், அடைக்கலம் தரத்தயாராக இருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கருத்திற்கு பங்களாதேஷ் ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளது. இந்த ‘அடைக்கல உதவியை’, பயங்கரவாதிகள் தவறாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அஞ்சுவதாக தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூலை 21 அன்று திரிணாமுல் காங்கிரஸின் மெகா ‘தியாகிகள்’ தினப் பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி, வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து மக்கள் “எங்கள் கதவுகளைத் தட்டினால்” அவர்களின் அரசாங்கம் தங்குமிடம் வழங்கும் என்றார்.

You May Also Like

More From Author