தடகள விளையாட்டுக்களில் அமெரிக்கா ஏற்படுத்திய பல களங்கங்களைக் கருத்தில் கொண்டு, பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க தடகள விளையாட்டு வீரர்கள் மீதான ஊக்கமருந்து சோதனையை சர்வதேச சோதனை சங்கம் அதிகரிக்க வேண்டும் என்று சீன ஊக்கமருந்து எதிர்ப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதன் மூலம், பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் நலன்களைப் பயனுள்ள முறையில் பாதுகாத்து, நியாயமான போட்டி மீது உலகளாவிய வீரர்களின் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று இந்த மையம் 8ஆம் நாள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.