தெலுங்கானா அமைச்சர்கள் சம்பளத்தில் 50% குறைப்பு; ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக அரசின் முடிவு  

Estimated read time 0 min read

தெலுங்கானா மாநிலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கான நீண்டகால நிலுவைத் தொகையை வழங்குவதற்காக, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள அம்மாநில அமைச்சரவை அதிரடி முடிவெடுத்துள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்க இமாச்சலப் பிரதேச அரசு எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தெலுங்கானாவிலும் இந்த முன்னுதாரணமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, “ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை விரைந்து வழங்குவதற்காக, அமைச்சர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் பாதியை (50%) விட்டுக் கொடுக்கத் முன்வந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author