சீன-அமெரிக்க மக்களுக்கிடையில் நட்புக் கதை தொடரும்
சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் வசித்து வந்த பாண்டாக்கள் மெய்ச்சியாங், தியென்தியென், வாஷிங்டன் டிசியில் பிறந்த தங்களது குழந்தை சியௌசிஜி ஆகியவை சீனாவுக்குத் திரும்பியுள்ளன.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட போது, அமெரிக்க மக்கள் பலர், அவற்றுக்கு பிரியாவிடை அளித்தனர். எதிர்காலத்தில், புதிய பாண்டாக்கள் அமெரிக்காவுக்கு மீண்டும் வர வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உள்ளூர் நேரப்படி நவம்பர் 15ஆம் நாள் இரவு, சான்ஃபிரான்சிஸ்கோவில் அமெரிக்க நட்புறவுக் குழுக்கள் வழங்கிய வரவேற்பு விருந்தில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இது பற்றி கூறுகையில், பாண்டாக்கள் பாதுகாப்பு பணியில் அமெரிக்காவுடன் இணைந்து தொடர்ந்து ஒத்துழைத்து, இரு நாட்டு மக்களின் நட்புறவை வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
இரு நாட்டு மக்களும் ஒருவருடன் ஒருவர் அன்பு பாராட்டி வருவது, இரு தரப்புறவை, தாழ்ந்த நிலையிலிருந்து இயல்புக்குத் திரும்பச் செய்து வருகிறது. சீனா மற்றும் அமெரிக்காவின் வளர்ச்சி பாதைகள் வேறுபட்டதாக இருந்தாலும், இரு நாட்டு மக்களின் தெரிவுகளாகும். மனிதக் குலத்தின் பொது மதிப்புகளுக்கு இவை பொருந்தி மதிக்கப்பட வேண்டும் என்று ஷிச்சின்பிங் இவ்விருந்தில் தெரிவித்தார். சீன-அமெரிக்க மக்கள், இரு தரப்புறவின் சீரான வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர் என்றும் ஷிச்சின்பிங் பல முறை வலியுறுத்தினார்.
வரலாற்றிலும் தற்போதயை நிலைமையிலும், இரு தரப்புறவின் வளர்ச்சிக்கான இயக்கு ஆற்றலாக அரசு சாரா பரிமாற்றம் விளங்குகிறது. பொது மக்களிடையே பரிமாற்றம், இரு தரப்புறவை வலுப்படுத்தும் வழியாகவும், இரு நாட்டு மக்களுக்கிடையில் இதயப் பாலமாகவும் திகழ்கிறது. இரு தரப்புறவுக்கான நம்பிக்கையும் அடிப்படையும் அரசு சாரா ரீதியில் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.