சீன-அமெரிக்க வெளியுறவுஅமைச்சர்களின் சந்திப்பு

சீன அரசவையின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான சிங் காங், ஜுன் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனைச் சந்தித்தார்.

இரு நாடுகளிடையே தூதாண்மையுறவு நிறுவப்பட்ட பிறகு தற்போது இரு நாட்டுறவு மிக தாழ்வான நிலையில் இருக்கின்றது. இரு நாட்டு மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நலனுக்கு இது நல்லது அல்ல. அமெரிக்காவின் மீது சீனாவின் கொள்கை தொடர்ச்சியாகவும் நிலையாகவும் உள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முன்மொழிந்த ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்தல், சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பின் மூலம் கூட்டு வெற்றி ஆகிய கோட்பாடுகளை சீனா தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என்று சின் காங் தெரிவித்தார்.

தைவான் விவகாரம் உள்ளிட்ட சீனாவின் முக்கிய நலன் மற்றும் கவனம் செலுத்தும் பிரச்சினைகள் குறித்து சீனாவின் கோரிக்கையை சிங் காங் முன்வைத்தார்.

இருநாடுகளுக்கிடையில் மானிடப் பண்பாட்டியல் மற்றும் கல்வி பரிமாற்றத்தை வலுப்படுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author