சீனத் தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டில், திங்களுக்கு சீனாவின் தூதஞ்சல் சேவையின் எண்ணிக்கை 1300 கோடியையும், இதன் வருமானம் 10 ஆயிரம் கோடி யுவானையும் எட்டி, வரலாற்றில் புதிய பதிவை உண்டாக்கியது.
மேலும், சீன தூதஞ்சல் சேவை துறையின் வளர்ச்சி கட்டமைப்பும் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் மத்திய மற்றும் மேற்குப் பிரதேசங்களில் விரைவு அஞ்சல் நிலையங்கள் தொடர்ந்து கட்டியமைக்கப்பட்டு வருவதால், சேவை அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், கிழக்கு, மத்திய, மேலை பிரதேசங்களிலுள்ள விரைவு அஞ்சல் சேவை அளவு, முறையே 73, 18.5 மற்றும் 8.5 விழுக்காடு பதிவாகியது. இது, கடந்த ஆண்டை விட, மத்திய மற்றும் மேலை பிரதேசங்களின் பங்கு முறையே 1.3, 0.9 விழுக்காடு புள்ளிகள் உயர்ந்துள்ளன.