சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் ஜூலை 27ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், பல்வேறு ஒட்டுமொத்த கொள்கைகள் நடைமுறைக்கு வருவதுடன், சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் லாபம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.5 விழுக்காடு அதிகமாகும்.
தொழில் நிறுவனங்களின் லாபம் சீராக மீட்சியடைந்து வருகின்றது.
மேலும், சாதனத் தயாரிப்புத் தொழில், தொழில் துறை லாபத்தின் அதிகரிப்புக்கான வலிமையான ஆதரவாகும். நுகர்வுப் பொருட்கள் தயாரிப்புத் தொழில் துறையின் லாபம் தொடர்ச்சியாகவும் உயர்வேகமாகவும் அதிகரித்து வருகிறது.
சுரங்கத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் தொழில் துறையின் லாபம் குறைந்து வரும் அளவு குறைந்துள்ளது. தவிரவும், தொழில் நிறுவனங்களின் மாத செலவு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட குறைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.