சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் டிசம்பர் 2ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சிரியாவின் வட மேற்கு பகுதியின் சூழ்நிலை பற்றி சீனா கவலைபடுவதாகவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதற்கு சிரியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சிரியாவின் சூழ்நிலை மேலும் மோசமாகாமல் தவிர்க்கும் விதம் ஆக்கப்பூர்வ முயற்சி மேற்கொள்ள சிரியாவின் நட்பார்ந்த நாடான சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
நவம்பர் 27ஆம் நாள் முதல், சிரியாவின் அரசுப் படையும், எதிர் பிரிவின் ஆயுதப் படை மற்றும் அதிதீவிரவாத அமைப்புகள் ஆகியவையும் அந்நாட்டின் வட மேற்கு பகுதியில் பெருமளவிலான சண்டையிட்டு கொண்டு வருகின்றன. கடந்த மூன்று நாட்களில், எதிர் பிரிவின் ஆயுதப் படை மற்றும் அதிதீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேரை சிரியா அரசுப் படை ராணுவ நடவடிக்கையில் சுட்டுக் கொன்றது என்று சிரியா தேசிய தொலைக்காட்சி டிசம்பர் முதல் நாள் தெரிவித்தது.