இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
புது டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அமீரக அதிபரை மரபுப்படி வரவேற்றார்.
இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பு, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு ஆசியாவில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரான்-அமெரிக்க உறவுகளில் விரிசல், காசாவில் தொடர்ந்து வரும் உறுதியற்ற தன்மை மற்றும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சம்பந்தப்பட்ட ஏமனில் தீர்க்கப்படாத மோதல்கள் இடையே இந்த விஜயம் நிகழ்ந்துள்ளது.
இந்தியா வந்தார் UAE அதிபர்; தேசிய பாதுகாப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்போவதாக தகவல்
