இழந்த தொல் பொருட்களை மீட்டெடுப்பதற்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
2012ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, இழந்த தொல் பொருட்களைத் திரும்பப் பெறும் முயற்சிகளைச் சீனா அதிகரித்துள்ளது. இது தொடர்பாக 24 நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தங்களில் சீனா கையொப்பமிட்டு, ஒத்துழைப்பு அமைப்பு முறையைக் கட்டியமைத்துள்ளது. இதன்வழி 1,800க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளன.