இவ்வாண்டு விரைவு அஞ்சல் துறையின் வருமானம் 1 லட்சம் கோடி யுவானைத் தாண்டும் சீனா

Estimated read time 0 min read

சீன தேசிய அஞ்சல் பணியகம் வெளியிட்ட தகவல்களின்படி, செப்டம்பர் 29ஆம் நாள் வரை, இவ்வாண்டில் நாட்டின் விரைவு அஞ்சல் துறையின் வருமானம் 1 லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

தற்போது, சரக்கு போக்குவரத்து வலையமைப்பு என ஒருங்கிணைந்த நவீன அஞ்சல் சேவை வலைப்பின்னலை சீனா உருவாக்கி வருகிறது. அஞ்சல் மற்றும் விரைவு தூதஞ்சல் சேவை துறையில் கிட்டத்தட்ட 200 முழு சரக்கு விமானங்களையும், 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவு அஞ்சல் சேவை வாகனங்களையும் கொண்டுள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் 4 லட்சத்து 13 ஆயிரம் சேவை நிலையங்கள் உள்ளன. கிட்டத்தட்ட 3 ஆயிரம் மையங்களில் நாள்தோறும் 40 கோடிக்கும் அதிகமான விரைவுப்பொதிகள் கையாளப்படுகின்றன. பெய்டோ அமைப்பு, 5ஜி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை, விரைவு அஞ்சல் துறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author