பல்வேறு நாடுகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு மேற்கொண்டு, உலக அறைகூவல்களைச் சமாளிக்க வேண்டும் என்று போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
வெளிநாட்டுத் திறப்பு பணி, பலதரப்புவாதத்தையும் பிரதேச ஒத்துழைப்பையும் ஆதரிப்பது ஆகியவை பற்றிய சீனாவின் வாக்குறுதிகளுக்கு சிங்கபூர் வரவேற்பு தெரிவிப்பதாக அந்நாட்டுத் தலைமை அமைச்சர் லி ஹெசின் லுங் தெரிவித்தார்.
ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் உலகப் பொருளாதார வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று ஸ்பெயினின் தலைமை அமைச்சர் சன்ஷேஸ் கூறினார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணி எட்டியுள்ள சாதனைகள், பல்வேறு நாடுகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிகாட்டியுள்ளது என்று மலேசிய தலைமை அமைச்சர் அன்வர் கூறினார்.