பன்னாட்டுத் தூதரக அதிகாரிகளின் சின்ஜியாங் பயணம்

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த 20க்கும் மேலான நாடுகளின் சீனாவுக்கான தூதரக அதிகாரிகள் ஜூலை 31முதல் ஆகஸ்ட் 4ஆம் நாள் வரை சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டனர். கேஷி, குச்சே, உருமுச்சி முதலிய
இடங்களிலுள்ள பழைய நகரங்கள், கிராமங்கள், மசூதிகள் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கு சென்று பார்வையிட்ட அவர்கள் உள்ளூர் மக்களுடன் நேரடி பரிமாற்றம் மேற்கொண்டனர். இப்பயணத்தின் மூலம் சின்ஜியாங் சமூகத்தின் வளர்ச்சி, தேசிய இனம் மற்றும் மதப் பண்பாட்டின் பாதுகாப்பு, மக்களின் வாழ்க்கை முதலிய நிலைமைகளை நேரில் அறிந்து கொண்டனர்.

கேஷி பழைய நகர், கிசில் குகைகள், சின்ஜியாங்கின் நாட்டுப்புற இசைக் கருவித் தயாரிப்பு ஊரான குச்சே நகரின் சின் ஜியாயி ஊர் முதலிய இடங்களில் பார்வையிட்ட அவர்கள் சின்ஜியாங் சிறுபான்மைத் தேசிய இனத்தின் பாரம்பரிய பண்பாடு மற்றும் வாழ்க்கைப் பழக்க வழக்கங்களின் நல்ல பாதுகாப்பைப் பார்த்து வியந்தனர்.
மேலும், கேஷி சுங்க வரி விலக்கு மண்டலம் மற்றும் உருமுச்சி சர்வதேச உலர் துறைமுகத்தினைப் பார்வையிட்டபோது சின்ஜியாங்கின் வளர்ச்சி மற்றும் உயிராற்றலை உணர்ந்தார்கள். 4லட்சத்து 60ஆயிரம் மக்களின் குடிநீர் பாதுகாப்புப் பிரச்சினையைத் தீர்க்கும் திட்ட வசதிகள், வேளாண் துறையில் உயர் திறன் கொண்ட நீர் சிக்கனம் மற்றும் வருவாய் அதிகரிப்பு மாதிரி தலங்கள், நவீனமயமாக்க அடிப்படை வசதிகளின் கட்டுமானம் முதலியவற்றைப் பார்த்தன் மூலம், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அரசின் முயற்சியையும் மனவுறுதியையும் பன்னாட்டுப்
பிரதிநிதிகள் உணர்ந்து கொண்டார்கள். தவிரவும், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான வளர்ச்சியை பார்வையிட்ட அவர்கள், வன்முறை மற்றும் பயங்கரவாதத்தால் சின்ஜியாங்
மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவையும் அறிந்து கொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author