ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம், மிக வரவேற்கப்பட்ட சர்வதேசத் திட்டம் மற்றும் மிகப்பெரிய அளவிலான சர்வதேச ஒத்துழைப்பு தளமாக மாறியுள்ளது என்பதை கடந்த 11 ஆண்டுகளில், உலகம் உண்மையில் அறிந்து கொண்டுள்ளது. டிசம்பர் 2ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் பற்றிய 4ஆவது பணிக் கூட்டத்தில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கட்டுமானம் அதிக சாதனைகளைப் பெறுவதற்குச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முழுமையாக பாராட்டினார். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியின் மீது அவர் பன்முகங்களிலும் பரவல் திட்டம் செய்துள்ளார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதில் வாய்ப்புகளும் அறைகூவல்களும் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக, அறைகூவல்களை விட வாய்ப்புகள் அதிகம். இது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மிகச் சிறந்த பிரகாசமான எதிர்காலத்துக்கு நம்பிக்கையையும் வலிமையையும் செலுத்துகிறது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சியை நனவாக்குவதற்கான திறவுகோல், தங்கு தடையற்ற தொழில்துறை சங்கிலி மற்றும் விநியோக சங்கிலியாகும். இவ்வாண்டின் முதல் 10 மாதங்களில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்னெடுப்பில் பங்கெடுத்த நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 16.94 இலட்சம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகமாகும்.
தற்போது, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், பொருளாதார மற்றும் வர்த்தகம் முதலிய பாரம்பரிய துறைகள் தவிர, பசுமை, எண்ணியல் மற்றும் புத்தாக்கம் முதலிய புதிதாக வளர்ந்து வரும் துறைகளிலான சீன மற்றும் பிற நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும். மேலும் பரந்த ஒத்துழைப்பு வாய்ப்புகளைக் கொண்டு வருவது தெற்குலக நாடுகளின் உயர் தர வளர்ச்சியை நனவாக்கத் துணை புரியும்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர வளர்ச்சி உலகப் பொருளாதாரத்துக்குப் புதிய உயிராற்றல் ஊட்டி, பல்வேறு நாடுகள் நவீனமயமாக்கத்தை நனவாக்குவதற்குப் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வந்து, மனித குலத்துக்கான பொது எதிர்காலச் சமூகக் கட்டுமானத்தைக் கூட்டாக முன்னேற்றும்.