சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதி ஜோசப் போரெல்லுடன் ஆகஸ்டு 6ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.
சீனாவுடன் நல்ல உறவை வளர்க்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாகப் பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட போரெல், ஐரோப்பிய ஒன்றியத்தின் “உலகளாவிய நுழைவாயில்” திட்டம், சீனாவின் “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”யின் முன்மொழிவு ஆகியவை ஒன்றோடோன்று போட்டி போடும் திட்டங்கள் அல்ல. மாறாக, ஒன்று மற்றதன் தேவையை நிறைவு செய்வதற்கு வாய்ப்பு உண்டு என்றும் உலகளாவிய வளர்ச்சியை மேம்படுத்துவதை அந்த திட்டங்கள் நோக்கமாகக் கொண்ட வைகளாகும் என்றும் கூறினார். சீனாவில் விரைவில் பயணம் மேற்கொண்டு, சீனாவுடன் நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்த எதிர்பார்க்கிறேன் என்றார்.
வாங் யீ கூறுகையில், தற்போது, சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான உயர்நிலை பரிமாற்றங்கள் நல்ல வளர்ச்சிப் போக்கை நிலைநிறுத்தி வருகின்றன. ஒத்துழைப்புக் கூட்டாளிகள், சீனா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் மிக முக்கியமான அம்சமாகும் என்று இரு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
மேலும், போரெல் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிக் குழு, இவ்வாண்டின் இலையுதிர்க்காலத்தில் சீனாவில் பயணம் மேற்கொண்டு, நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்துவதைச் சீனா வரவேற்கிறது எனக் குறிப்பிட்ட வாங்யீ, பரந்த மற்றும் ஆழ்ந்த பரிமாற்றங்களின் மூலம் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்புகளுக்குச் சீனா அரசியல் ரீதியாக தயாராக உள்ளது என்றும் கூறினார்.