பிரிக்ஸ் புத்தாக்கத் தளம் நிறுவப்பட்டு இந்த ஆண்டன், 5 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இதையொட்டி சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், 16ம் நாள் ஷியா மன் நகரில், 2025ம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளின் புதிய தொழில் புரட்சி கூட்டாளியுறவின் மன்றக் கூட்டம் நடத்தியது. அதில் பிரிக்ஸ் நாடுகளின் தொழில் ஆற்றலுக்கான சீன மையத்தை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மையம் மூலம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்கம், எண்ணியல் மாற்றம், கரி குறைந்த மற்றும் திறமைசாலிகள் ஒத்துழைப்பு முதலிய முக்கிய துறைகளில், பிரிக்ஸ் நாடுகளின் திட்டப்பணி ஒத்துழைப்புகள் மேற்கொள்ளப்படும்.
தற்போது பிரிக்ஸ் நாடுகளின் மொத்த மக்கள் தொகை, உலகின் மக்கள் தொகையில் சுமார் பாதியளவு வகிக்கிறது. அவற்றின் பொருளாதார மதிப்பு, உலகளவில் சுமார் 30 விழுக்காடு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
