பிரான்ஸ் அரசுத் தலைவரின் சீனப் பயணத்தை ஒட்டி, 2024 பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாரலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவர் டோனி எஸ்தங்குயெட் சீன ஊடகக் குழும இயக்குநர் ஷென் ஹாய்சியோங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், பெய்ஜிங்கிலிருந்து பாரிஸுக்கு எனும் பல்லூடக நிகழ்ச்சியின் துவக்கத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தொலைக்காட்சி, வானொலி மற்றும் புதிய ஊடகம் போன்ற்றின் மூலம் பரப்பப்படும் உங்கள் நிகழ்ச்சியானது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாரிஸுக்குத் திரும்பும் நிலையில் நடத்தப்படும் கொண்டாட்டத்துக்குச் சிறந்த மேடையாகும் என்று அவர் கூறினார்.
மேலும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த வீரராக, பெய்ஜிங் மற்றும் பாரிஸ் இடையே உள்ள உறுதியான ஒலிம்பிக் தொடர்பு பெரும் கூடுதல் மதிப்பு கொண்டு வரும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.