பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சீனாவிற்கு முதலாவது தங்கம்

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெற்றது. அதில் சீன வீராங்கனை ஜெங் சின்வென் குரோஷியா வீராங்கனை டோனா வெகிகை வீழ்த்தித் தங்கப் பதக்கம் வென்றார். இப்பிரிவில் சீனா முதன்முறையாக தங்க பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஒலிம்பிக் வரலாற்றில் இந்தப் பிரிவில் தங்க பதக்கம் வென்ற முதல் ஆசிய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இதுவரை, பாரிஸ் ஒலிம்பிக்கில், சீனா 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என 37 பதக்கங்களை வென்றது.

You May Also Like

More From Author