சர்வதேச நிதிச் சங்கம் அண்மையில் உலகக் கடன் கண்காணிப்பு பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, தற்போது உலகளாவிய கடன் தொகை 305 லட்சம் கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. அவற்றில் அமெரிக்காவே உலகளவில் அதிகம் கடன் கொண்ட நாடாகத் திகழ்கின்றது.
அமெரிக்க டாலர் மேலாதிக்கத்தை நீண்டகாலமாக நடத்தி வரும் அமெரிக்கா, பொறுப்பற்ற முறையில் கடன் வழங்கி உலகிலேயே பணவீக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீட்சியைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வேன்பின் 8ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க டாலர் என்பது எங்களின் நாணயம். ஆனால் அது உங்களுக்குச் சிக்கலாகும் என்று அமெரிக்காவில் நிக்சன் அரசின் நிதி அமைச்சராக இருந்த ஜோன் கோனலியின் கூற்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது என்றும் வாங் வேன்பின் குறிப்பிட்டார்.