ஹாய்நான் பொருளாதாரச் சிறப்பு மண்டலத்தின் சாதனைகள்
இவ்வாண்டின் ஏப்ரல் 13ஆம் நாள், ஹாய்நான் மாநிலத்தில் பொருளாதாரச் சிறப்பு மண்டலம் நிறுவப்பட்ட 30ஆவது ஆண்டு கொண்டாட்ட மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் நிகழ்த்திய முக்கிய உரையின் 5வது ஆண்டு நிறைவாகும். ஹாய்நான் மாநிலத்தில் பொருளாதாரச் சிறப்பு மண்டலம் நிறுவப்பட்ட 35ஆவது ஆண்டு நிறைவு நாளாகவும் ஆகும்.
ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகத்தின் ஒட்டுமொத்த கட்டுமானத் திட்டத்தின் படி, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், ஹாய்நான் வலுவான சர்வதேச செல்வாக்குடைய உயர் தரத் தாராள வர்த்தகத் துறைமுகத்தை முழுமையாக உருவாக்கவுள்ளது.
புள்ளிவிவரங்களின் படி கடந்த 5 ஆண்டுகளில் ஹாய்நான் தாராள வர்த்தகத் துறைமுகத்தில் அந்நிய முதலீட்டில் உண்மையாகப் பயன்படுத்தப்பட்ட தொகை, ஆண்டுதோறும் 63.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட அந்நிய முதலீட்டு தொகை முந்தைய 30 ஆண்டுகளில் இருந்த அளவை விட அதிகமாக இருந்தது.
ஹாய்நான் பொருளாதாரச் சிறப்பு மண்டலத்தில் பெற்றுள்ள சாதனைகள், சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியின் ஒரு உயிர்த்துடிப்பான மாதிரியாகும் என்று ஷிச்சின்பிங் கூறினார்.